1980 ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பானது (UNWTO - United Nations World Tourism Organization) செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினத்தை கொண்டாடி வருகின்றது.
1970 செப்டம்பர் மாதம் 27 அன்று UNWTOன் விதிமுறைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்தத் தினமானது சர்வதேசச் சமூகத்திற்குள் சுற்றுலாவின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் உலகெங்கிலும் உள்ள சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார விழுமியங்கள் மீது சுற்றுலா எவ்வாறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என்பதை நிரூபிப்பதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "சுற்றுலா உலகின் ஒரு முக்கியத் துறை" என்பதாகும்.
2019 ஆம் ஆண்டில் இத்தினத்தை தலைமையேற்று நடத்தும் நாடுகள்
1997 ஆம் ஆண்டு முதல், UNWTO ஆனது இத்தினக் கொண்டாட்டங்களை நடத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட நாட்டைத் தேர்ந்தெடுக்கின்றது.
2019 ஆம் ஆண்டில் இந்தியா இத்தினத்தை தலைமையேற்று நடத்துகின்றது. "சுற்றுலா மற்றும் பணிகள்: அனைவருக்கும் சிறந்த எதிர்காலம்" என்ற கருப்பொருளின் கீழ் இந்தியா இத்தினத்தை அனுசரிக்கின்றது.