3வது உலக சூரிய சக்தி அறிக்கைத் தொடரானது சமீபத்தில் சர்வதேச சூரிய சக்திக் கூட்டணியின் 7வது கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
உலக சூரிய சக்தி சந்தை அறிக்கை, உலக முதலீட்டு அறிக்கை, உலகத் தொழில்நுட்ப அறிக்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான பசுமை ஹைட்ரஜன் மீதான தயார் நிலை மதிப்பீடு ஆகிய 4 அறிக்கைகள் புதிதாக வெளியிடப் பட்டுள்ளன.
உலக சூரிய சக்தி சந்தை அறிக்கையானது, 2000 ஆம் ஆண்டில் 1.22 GW ஆக இருந்த உலகளாவிய உற்பத்தி திறன் ஆனது 2023 ஆம் ஆண்டில் 1,418.97 GW ஆக உயர்ந்து உள்ளதுடன் அதிகபட்ச சூரிய சக்தி அதிகரிப்பினை வெளிப்படுத்துகிறது.
சமீபத்திய உலக முதலீட்டு அறிக்கையானது, 2018 ஆம் ஆண்டில் சுமார் 2.4 டிரில்லியன் டாலராக இருந்த ஆற்றல் முதலீடுகள் ஆனது 2024 ஆம் ஆண்டில் சுமார் 3.1 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளதுடன் நிலையான ஆற்றலை நோக்கிய பெரும் உலகளாவிய மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
உலகத் தொழில்நுட்ப அறிக்கையின் சிறப்பம்சங்களில் சூரிய ஒளி மின்னழுத்த (PV) தொகுதிகளில் ஒரு சாதனை அளவிலான சுமார் 24.9% செயல்திறன், 2004 ஆம் ஆண்டு முதல் சிலிக்கான் பயன்பாட்டில் 88% குறைப்பு ஆகியவை அடங்கும்.