மே 02 அன்று உலக சூரை மீன் தினம் அனுசரிக்கப்பட்டது.
இத்தினமானது சூரை மீனின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நீடித்த மீன்பிடி செயல்முறைகளை ஊக்குவிப்பதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு மே 02 ஆம் தேதி அன்று உலக சூரை மீன் தினமானது முதன்முறையாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இத்தினத்தை அதிகாரப்பூர்வமாக கடைப்பிடிப்பதற்கு வாக்களித்தது.