TNPSC Thervupettagam

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் – மே 08

May 9 , 2019 1970 days 675 0
  • ஒவ்வொரு ஆண்டும் மே 08 ஆம் தேதி உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் அனுசரிக்கப்படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “#அன்பு” என்பதாகும்.
  • இத்தினமானது உதவி தேவைப்படுகின்ற மக்களுக்கு ஈடு இணையற்ற உதவிகளைச் செய்யும் தன்னார்வலர்களை கௌரவிக்கின்றது.
  • இந்தத் தினமானது ஹென்றி துனன்ட் என்பவரின் பிறந்த தினமாகும்.
  • இவர் 1863 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சர்வதேசச் செஞ்சிலுவைக் குழுவின் (ICRC - International Committee of the Red Cross) நிறுவனர் ஆவார்.
  • 1901 ஆம் ஆண்டில் முதலாவது நோபல் அமைதிப் பரிசைப் பெற்றவர் இவராவார்.
  • 1948 ஆம் ஆண்டு மே 08 அன்று முதலாவது செஞ்சிலுவை தினம் அனுசரிக்கப்பட்டது.
  • இது 1984 ஆம் ஆண்டில் “உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம்” என்ற பெயரைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்