TNPSC Thervupettagam

உலக செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை அமைப்பின் தலைமை

December 15 , 2022 585 days 326 0
  • டோக்கியோவில் நடைபெற்ற 2022-23 ஆம் ஆண்டிற்கான உலக செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை அமைப்பின் கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பினை பிரான்சு நாட்டிடமிருந்து இந்தியா பெற்றது.
  • உலக செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை அமைப்பு என்பது மனிதனை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கி வரும் செயற்கை நுண் அறிவினைப் பொறுப்பு மிக்க முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் ஒரு சர்வதேச முயற்சியாகும்.
  • செயற்கை நுண்ணறிவின் கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட முதல் முன்னெடுப்பு இது ஆகும்.
  • இந்தியா 2020 ஆம் ஆண்டில் உலக செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை அமைப்பின் ஸ்தாபன உறுப்பினராக இணைந்தது.
  • உலக செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை அமைப்பு என்பது அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி, டென்மார்க் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 25 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட ஒரு சபையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்