TNPSC Thervupettagam

உலக செல்வ வள அறிக்கை 2023

August 23 , 2023 331 days 214 0
  • 14வது உலக செல்வ வள அறிக்கையானது கிரெடிட் சூயஸ் மற்றும் UBS ஆகியவற்றினால் இணைந்து வெளியிடப்பட்டது.
  • 200 நாடுகளில் உள்ள 5.4 பில்லியன் வயது வந்தோரின் செல்வ வளமானது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகளாவியச் செல்வ வளம் 629 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று கூறுகிறது.
  • தற்போதைய அமெரிக்க டாலர் மதிப்பிலான பெயரளவிலான மதிப்பீட்டில், மொத்த நிகர தனியார் செல்வ வளமானது 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 11.3 டிரில்லியன் டாலர்கள் (–2.4%) குறைந்து 454.4 டிரில்லியன் டாலர்களாக உள்ளது.
  • ஒரு வயது வந்த நபரின் செல்வ வளமானது 3,198 (–3.6%) டாலர்கள் குறைந்து 84,718 அமெரிக்க டாலர்களை எட்டியது.
  • ஒரு வயது வந்த நபரின் செல்வ வள மதிப்பின் அடிப்படையில், சுவிட்சர்லாந்து முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஹாங்காங் தன்னாட்சிப் பிராந்தியம், ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
  • ஆசியப் பசிபிக் பிராந்தியத்தில் 2.1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இழப்புப் பதிவாகி உள்ளது.
  • இலத்தீன் அமெரிக்கா 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மொத்தச் செல்வ வள உயர்வுடன் தனித்துவ நிலையில் உள்ளது.
  • ரஷ்யா, மெக்சிகோ, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் மிகப்பெரியச் செல்வ வள உயர்வு பதிவாகியுள்ளது.
  • உலக நாடுகளின் செல்வ வளமானது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 38% அதிகரித்து, 2027 ஆம் ஆண்டில் 629 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • BRICS அமைப்பின் உறுப்பினர் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் செல்வ வளமானது 2027 ஆம் ஆண்டிற்குள் 30% உயரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்