இத்தினமானது கேட்கும் திறன்ஆரோக்கியம் குறித்தும், கேட்கும் திறனை இழப்பதைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வை பரப்பச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக மக்கள்தொகையில் 5 சதவீதத்திற்கும் அதிகமானோர் (தோராயமாக 43 கோடி பேர்) 'குறைபாடு மிக்க' கேட்கும் திறன் இழப்பிற்குச் சிகிச்சை பெற சில மறுவாழ்வு நடவடிக்கைகள் அவசியமாக உள்ளது.
2050 ஆம் ஆண்டில் 70 கோடிக்கும் அதிகமான நபர்கள், அல்லது பத்து பேரில் ஒருவர், செவியின் கேட்கும் திறனை இழப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'குறைபாடு மிக்க' கேட்கும் திறன் இழப்பு என்று அழைக்கப்படும் ஒரு கேட்கும் திறன் இழப்பு ஆனது, சரியான கேட்கும் திறனுள்ள காதில் 35 டெசிபல் (dB) அளவினை விட குறைவான ஒலியை கேட்கும் திறன் இழப்பாக வரையறுக்கப்படுகிறது.
கேட்கும் திறன் இல்லாதவர்களில் சுமார் 80% பேர் மிகவும் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வசிக்கின்றனர்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Changing mindsets: Empower yourself to make ear and hearing care a reality for all!" என்பதாகும்.