TNPSC Thervupettagam

உலக சைவ உணவாளர் (Vegetraian) தினம் – நவம்பர் 1

November 3 , 2017 2554 days 861 0
  • உலக சைவ உணவாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 1ம் தேதி கொண்டாடப் படுகிறது. இது விலங்குகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை எழுப்புவதோடு ஒரு சைவ வாழ்க்கை முறையை பரவலாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வாதிக்கிறது.
  • இந்த நாள், பிரிட்டிஷ் விலங்குகள் உரிமைகள் ஆர்வலர் லூயிஸ் வாலிஸால் 1994-ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இது பிரிட்டனில் சைவ உணவர்கள் சமூகம் (Vegan Society) தோற்றுவிக்கப்பட்ட 50வது ஆண்டு நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
  • சைவம் ஓர் உணவு முறையாகவும் (விலங்குகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை தவிர்ப்பது) வாழ்க்கைத் தத்துவ முறையாகவும் (விலங்குகளை விலை பொருளாக நினைப்பதை நிராகரிப்பது) கடைபிடிக்கப்படுகிறது. இவற்றின் இரண்டில் எதாவது ஒன்றைக் கடைபிடிப்பவர்கள் சைவ உணவாளர் என அழைக்கப்படுகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்