உலக சைவ உணவாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 1ம் தேதி கொண்டாடப் படுகிறது. இது விலங்குகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை எழுப்புவதோடு ஒரு சைவ வாழ்க்கை முறையை பரவலாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வாதிக்கிறது.
இந்த நாள், பிரிட்டிஷ் விலங்குகள் உரிமைகள் ஆர்வலர் லூயிஸ் வாலிஸால் 1994-ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இது பிரிட்டனில் சைவ உணவர்கள் சமூகம் (Vegan Society) தோற்றுவிக்கப்பட்ட 50வது ஆண்டு நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
சைவம் ஓர் உணவு முறையாகவும் (விலங்குகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை தவிர்ப்பது) வாழ்க்கைத் தத்துவ முறையாகவும் (விலங்குகளை விலை பொருளாக நினைப்பதை நிராகரிப்பது) கடைபிடிக்கப்படுகிறது. இவற்றின் இரண்டில் எதாவது ஒன்றைக் கடைபிடிப்பவர்கள் சைவ உணவாளர் என அழைக்கப்படுகிறார்கள்.