உலக சைவ உணவுப் பழக்க தினம் என்பது நவம்பர் 1 ஆம் தேதியன்று உலகெங்கிலும் உள்ள சைவ உணவு உண்பவர்களால் கொண்டாடப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
உலக சைவ உணவுப் பழக்க தினமானது விலங்கு உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. இது சைவ உணவுப் பழக்க வாழ்க்கை முறையைப் பரவலாக ஏற்றுக் கொள்வதை ஆதரிக்கின்றது.
ஐக்கிய ராஜ்ஜியத்தின் சைவ உணவுப் பழக்கச் சமூகம் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் ஒரு முயற்சியாக, 1994 ஆம் ஆண்டில் பிரிட்டிஷைச் சேர்ந்த ஒரு விலங்கு நல உரிமை ஆர்வலரான லூயிஸ் வாலிஸ் என்பவரால் இந்த தினம் உருவாக்கப் பட்டது.
சைவ உணவைப் பின்பற்றுபவர்கள் இறைச்சி, முட்டை, பால் மற்றும் தேன் போன்ற விலங்குகளிடமிருந்துப் பெறப்படும் எதையும் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள்.