உலக டிஜிட்டல் மருத்துவ கூட்டுப் பங்களிப்பு மாநாடு (World Digital Health Partnership Summit) ஆஸ்திரேலியாவிலுள்ள கான்பெர்ராவில் நடைபெற்றது.
இதில் இந்தியா சார்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் JP நட்டா கலந்து கொண்டு “சுகாதார மறுசீரமைப்பில் டிஜிட்டல் மருத்துவ சேவைக்கு முன்னுரிமை அளிப்பது“ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சுகாதார சேவைகள் வழங்குதலை மேம்படுத்துவதற்கான ஆற்றல் வளம் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு நுட்பத்திடம் (Information and Communication Technology- ICT) உள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ICTஐ பயன்படுத்தி சுகாதார சேவைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா உறுதியேற்றுள்ளது.