இத்தினமானது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நபர்களைப் பாதிக்கும் கற்றல் திறன் சார்ந்த வேறுபாட்டு நிலையான டிஸ்லெக்ஸியா (வாசிப்புத் திறன் குறைபாடு) குறித்தத் தகவல்களை வெளிக் கொணர்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
டிஸ்லெக்ஸியா விழிப்புணர்வு வாரம் ஆனது ஆண்டுதோறும் அக்டோபர் 02 முதல் 08 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
டிஸ்லெக்ஸியா குறைபாடு உள்ளவர்கள் வாசிப்பு, எழுதுதல், சொற்களஞ்சியம் மற்றும் கை-கண் ஒருங்கிணைப்பு தேவைப்படும் பணிகளில் சிரமப்படுவர்.
உள்ளடக்கம், கல்விக்கான அணுகல் மற்றும் டிஸ்லெக்ஸியா உள்ளவர்களுக்கு அவர்களின் கற்றல் திறன் முயற்சிகளில் உதவி வழங்குவதற்கான பயனுள்ள உத்திகளை செயல்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்தச் செய்வதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘தனித்துவமாக மனிதர்கள்’ என்பதாகும்.