உலக தங்க ஆணையமானது (World Gold Council - WGC) சமீபத்தில், “2020 ஆம் ஆண்டுக்கான உலக தங்க இருப்புக் கண்ணோட்டம்” என்னும் அறிக்கையை வெளியிட்டுள்ளது
2010 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிடும் பொழுது 2019 ஆம் ஆண்டு தங்கத்தின் மீதான முதலீடுகள் மிகச் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
WGC இன் கூற்றுப் படி, இந்திய ரிசர்வ் வங்கியானது தற்போது 625.2 டன் தங்கத்தை இருப்பு வைத்திருக்கின்றது.
இது நாட்டின் அந்நியச் செலாவணி மதிப்பில் 6.6% ஆகும்.
இதன் மூலம், உலகில் மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவானது உலகில் ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவை விட அதிக தங்கம் இருப்பு வைத்திருக்கின்ற மற்ற 5 நாடுகளாவன - சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், துருக்கி மற்றும் போலந்து ஆகியவையாகும்.
2019 ஆம் ஆண்டில், தங்கத்தை அதிகம் விற்பனை செய்த நாடுகள் உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகும்.
WGC பற்றி
WGC இன் தலைமையகமானது லண்டனில் அமைந்துள்ளது.
WGC இன் அலுவலகங்கள் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன.
இந்தியாவில் WGC அலுவலகமானது மும்பையில் அமைந்துள்ளது.