உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது முதல்முறையாக அமெரிக்காவில் நடத்தப் பட்டது.
பதக்கப் பட்டியலைப் பொறுத்த வரையில், அமெரிக்க அணி கடந்த 10 நாட்களில் தங்களின் போட்டி நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியது.
இதில் இந்தியா ஒட்டு மொத்தமாக 33வது இடத்தையும், ஆசிய அளவில் சீனா, ஜப்பான் மற்றும் கஜகஸ்தானுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தையும் பிடித்தது.
அல்ஜீரியா, புர்கினா பாசோ, குரோஷியா, கிரீஸ், தென் கொரியா ஆகிய நாடுகள் தலா 1 வெள்ளிப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் இந்தியாவுடன் சேர்த்து 33வது இடத்தில் உள்ளன.