2023 ஆம் ஆண்டு உலக தண்ணீர் கண்காணிப்பு அறிக்கையின்படி, 77க்கும் மேற்பட்ட நாடுகள் கடந்த 45 ஆண்டுகளில் அதிகபட்ச சராசரி வருடாந்திர வெப்பநிலையை எதிர்கொண்டுள்ளன.
அனைத்துப் பருவங்களிலும் அதிக சராசரி வெப்பநிலை பதிவானது.
2023 ஆம் ஆண்டு ஆனது காற்றின் சார்பு நிலை ஈரப்பதத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தததோடு இது அதிக உலர் சராசரி மற்றும் அதி தீவிர நிலைகளை நோக்கியப் போக்கைத் தொடர்கிறது.
வெப்பமான மற்றும் வறண்ட நிலை இருந்தபோதிலும், பல பகுதிகளில் அதிக வருடாந்திர ஈர மண் நிலைகள் பதிவாகின.
ஒரு நிலப்பரப்பில் உள்ள மண்ணில் காணப்படும் நீரின் அளவு ஆனது, 1998-2005 ஆம் ஆண்டுகளின் சராசரியை விட 3.5 சதவீதம் அதிகமாக இருந்தது.
கடந்த இருபது ஆண்டுகளில் பதிவான மேற்பரப்பு நீர்நிலைகளின் உருவாக்கம் ஆனது (ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற தற்காலிக வெள்ளம் உட்பட) இரண்டாவது மிகக் குறைவானது ஆகும்.
உலகளவில் மேற்பரப்பு நீர்நிலைகளின் உருவாக்கம் ஆனது 2003-2006 ஆம் ஆண்டுகளின் சராசரியை விட 7 சதவீதம் குறைவாக இருந்த நிலையில் இது 2011 ஆம் ஆண்டு முதல் பதிவான மிகக் குறைவான அளவாகும்.