இந்த நாள் ஆனது நன்னீர் வளங்களின் மிகவும் நிலையான ஒரு மேலாண்மைக்காகப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1992 ஆம் ஆண்டு, ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு மீதான மாநாட்டில் இந்த நாளைக் கொண்டாடச் செய்வதற்கான முன்மொழிவு ஆனது முன்வைக்கப்பட்டது.
2030 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்குமான நீர் மற்றும் சுகாதாரம் என்ற 6வது நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்கினை (SDG) அடைவதை ஆதரிப்பதே உலகத் தண்ணீர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘செழிப்பு மற்றும் அமைதிக்கான நீர்’ என்பதாகும்.