உலக வளங்கள் நிறுவனத்தின் (WRI - World Resources Institute) புதிய தரவின்படி, உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) மிகப் பெரிய தண்ணீர்ப் பிரச்சினையை எதிர் கொண்டிருக்கின்றனர். இவர்களில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக மொத்த தண்ணீர் விநியோகத்தில் 80 சதவிகிதத்திற்கும் மேலான நீரைப் பாசன விவசாயம், தொழிற்சாலைகள் மற்றும் நகராட்சிகள் ஆகியவை பயன்படுத்துகின்றன.
தற்பொழுதுள்ள நீர் விநியோகத்தில் 80 சதவிகிதம் அல்லது அதற்கும் மேலான நீரை 17 நாடுகள் பயன்படுத்துகின்றன. இந்த 17 நாடுகளில் இந்தியா 13-வது இடத்தில் இருக்கின்றது.
1990 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் வட இந்தியாவில் உள்ள நிலத்தடி நீர்மட்டங்கள் ஒரு ஆண்டுக்கு 8 சதவிகிதத்திற்கும் மேல் குறைந்து விட்டன.
அக்குவாடெக்ட் (Aqueduct) என்ற கூறானது WRIயினால் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நிறுவனம் “தண்ணீர் அபாய மதிப்பெண்களின்” அடிப்படையில் நாடுகளை தரவரிசைப் படுத்துகின்றது. இந்த மதிப்பெண்கள் தண்ணீர் அபாயத்தின் 13 கூறுகளைப் பயன்படுத்தி நிர்ணயிக்கப்படுகின்றன.