உலக தத்துவ தினமானது 2002 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் அறிமுகப் படுத்தப்பட்டது.
2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ பொது மாநாடானது நவம்பர் மாதத்தின் ஒவ்வொரு மூன்றாவது வியாழக் கிழமையன்றும் உலக தத்துவ தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்தது.
மனித சிந்தனையின் வளர்ச்சிக்கும் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தத்துவத்தின் நீடித்த மதிப்பை இத்தின அனுசரிப்பானது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
2019 ஆம் ஆண்டுப் பதிப்பானது வெவ்வேறு பிராந்திய சூழல்களில் தத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.