உலக தபால் தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 9 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
இது 1874ம் ஆண்டில் உலகத்தின் தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்திய சர்வதேச அஞ்சல் ஒன்றியத்தின் உருவாக்கத்திற்கான நினைவு தினமாகும்.
1948ம் ஆண்டில் அந்த அமைப்பு ஐக்கிய நாடுகளின் அமைப்புகளில் ஒன்றாகியது.
1969ம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச அஞ்சல் ஒன்றியத்தின் மாநாட்டில் அக்டோபர் 9ம் தேதி முதல் முறையாக உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது.
இந்த முன்மொழிவு அந்த அமைப்பில் உள்ள இந்தியப் பிரதிநிதித் தரப்பின் ஒரு உறுப்பினரான ஆனந்த் மோகன் நரூலா என்பவரால் சமர்ப்பிக்கப்பட்டது.