தாய்ப்பாலூட்டுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07 வரை உலக தாய்ப்பாலூட்டும் வாரமாக (2018) அனுசரிக்கப்படுகிறது.
தாய்ப்பாலூட்டுவதன் மீதான யுனிசெப் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உலகம் முழுவதும்8 கோடி குழந்தைகளுக்கு பிறந்த 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அளிக்கப்படுவதில்லை என்று குறிப்பிடுகிறது.
குழந்தை பிறந்த 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பாலூட்டுதலை தொடங்க வேண்டும்.
இந்தியாவில் தாய்ப்பாலூட்டுதல் ஆனது 2005-ல்4 சதவீதத்திலிருந்து 2015-ல் 41.5 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
உலகம் முழுவதும் தாய்ப்பாலூட்டுதல் ஆனது 2015-ல் 37 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
தாய்ப்பாலூட்டுதல் குறைபாடானது கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் (65 சதவீதம்) அதிகமாகக் காணப்படுகிறது. இது கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக்கில் (32 சதவீதம்) குறைவாகக் காணப்படுகிறது.
பிறந்த 2 மணி முதல் 23 மணி நேரத்திற்குள் பாலூட்டப்படும் குழந்தைகள், பிறந்த 1 மணி நேரத்திற்குள் பாலூட்டப்படும் குழந்தைகளுடன் ஒப்பிடும் போது இறப்பதற்கு 33 சதவீதம் அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றன.