இந்த வாரமானது, தாய்ப்பால் கொடுப்பதால், குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் இருவரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் விளையும் நன்மைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் அதனை ஊக்குவிப்பதற்காகவும் உலகளவில் கொண்டாடப் படுகிறது.
1991 ஆம் ஆண்டில், தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகளை மக்களுக்கு தெரிவிக்கச் செய்வதற்காக உலகத் தாய்ப்பாலூட்டல் நடவடிக்கை (WABA) என்ற அமைப்பானது உருவாக்கப் பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “தாய்ப் பால் ஊட்டலை நடைமுறையாக்கல்: பணிபுரியும் பெற்றோருக்காக ஒரு மாற்றத்தை ஏற்படுத்துதல்” என்பதாகும்.
தாய்ப் பாலூட்டலானது, ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட 8,20,000 குழந்தைகளின் உயிரைக் காக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.