சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு உலக திறமைகள் தர வரிசையில் கடந்த ஆண்டு 56வது இடத்தில் இருந்த இந்தியாவின் தரவரிசையானது 58 இடத்திற்கு சரிந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்தியா 52வது இடத்தில் இருந்தது.
இந்தப் பதினோராவது பதிப்பில் இடம் பெற்றுள்ள 67 நாட்டுப் பொருளாதாரங்களில் சுவிட்சர்லாந்து முதலிடத்தையும், சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும், லக்ஸம்பர்க் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
2014 ஆம் ஆண்டு இந்தத் தரவரிசைப் பட்டியல் தொடங்கப்பட்டதற்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூர் நிலையான அளவில் முன்னேறியுள்ளது.