உலக துச்சேன் தசைச்சிதைவு நோய் தினம் - செப்டம்பர் 07
September 17 , 2023 437 days 177 0
துச்சேன் தசைச்சிதைவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி ஒவ்வோர் ஆண்டும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
கல்வி, ஆலோசனை மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவை மூலம் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பல்வேறு முயற்சிகளை ஆதரிப்பதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.
இந்த அரிய வகை சிதைவு நோயானது முழு உடலையும் பாதிக்கும் வரை காலப் போக்கில் உடல் தசைகளைப் பலவீனப்படுத்துகிறது.
ஐந்தாயிரம் ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தப் பாதிப்புடன் பிறக்கிறது.
இது X-குரோமோசோம் பிறழ்வின் விளைவினால் ஏற்படுகிறது.