உலக துச்சேன் நோய் விழிப்புணர்வு தினம் - செப்டம்பர் 07
September 10 , 2024
74 days
62
- உலகளவில் 300,000 நோயாளிகளைப் பாதித்துள்ள இந்நோய் பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஓர் அரிய நோயான துச்சேன் தசைச்சிதைவு நோய் முழு உடலிலும் பரவிப் பாதிக்கும் வரை காலப்போக்கில் தசைகளைப் பலவீனமாக்குகின்றது.
- தோராயமாக 5,000 ஆண் குழந்தைகளில் ஒருவர் இந்த நோயுடன் பிறக்கின்றனர்.
- இது X-குரோமோசோமில் ஏற்படும் பிறழ்வினால் ஏற்படுகிறது அதனால் தான் மிகவும் பிரதானமாக ஆண்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
- 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்திற்கான கருத்துரு, 'Raise your voice for Duchenne' என்பதாகும்.
Post Views:
62