துளிம (குவாண்டம்) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிய பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
4.14 வடிவத்தில் உள்ள ஏப்ரல் 14 ஆம் தேதியானது, குவாண்டம் இயற்பியலின் அடிப்படை மதிப்பான பிளாங்க் என்ற மாறிலியின் முதல் மூன்று இலக்கங்களின் ஒரு மதிப்பினைக் குறிக்கிறது.
பிளாங்க் மாறிலியின் மதிப்பு என்பது 4.1356677×10−15 eV⋅s ஆகும்.
ஆற்றல் மற்றும் நேரம் ஆகியவற்றின் பெருக்கல் பலனான இது குவாண்டம் இயற்பியலில் பயன்படுத்தப் படும் ஒரு அடிப்படை மாறிலியாகும்.