இது மருத்துவம், கல்வி, சமூகப் பணி மற்றும் வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றில் தூக்கம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், சிறப்பான (முறையான) தூக்கத்தைக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
உலக தூக்க தினம் ஆனது, 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து வடக்கு அரைக் கோளத்தில் மார்ச் மாத சம இரவு பகல் நாளுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான உலக தூக்க தினத்தின் கருத்துரு என்பது 'உலகளாவிய ஆரோக்கியத்திற்கான தூக்க சமநிலை' ஆகும்.