செப்டம்பர் 2 ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த நிகழ்வு தென்னை வளர்ச்சி வாரியத்தால் (Coconut Development Board) ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மற்றும் பசிபிக் தென்னை வளர்ப்புக் குழு (Asian and Pacific Coconut Community - APCC) நிறுவப்பட்ட தினத்தோடு ஒன்றி வரும் வகையில் , செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தென்னை வளர்ப்பை ஊக்குவிப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் இந்த அமைப்பு நிறுவப்பட்டது.
உறுப்பினர்கள் எண்ணிக்கை: 18
இந்தியா உட்பட அனைத்து முக்கிய தென்னை வளர்ப்பு நாடுகளும் ஆசிய மற்றும் பசிபிக் தென்னை வளர்ப்புக் குழுவின் உறுப்பினர்கள் ஆவர் .
2017 ஆம் ஆண்டு உலக தேங்காய் தினத்திற்கான கருப்பொருள்: குடும்ப ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்காக தேங்காய் (Coconut for Family Nutrition, Health and Wellness)