TNPSC Thervupettagam

உலக தேங்காய் தினம் – செப்டம்பர் 02

September 4 , 2022 721 days 327 0
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "சிறந்த எதிர்காலம் மற்றும் சிறந்த வாழ்க்கைக்காக தேங்காய் வளர்ப்பது" என்பதாகும்.
  • முதல் உலக தேங்காய் தினமானது 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் தேதியன்று ஆசிய பசிபிக் தேங்காய்ச் சமூகத்தினால் (APCC) கொண்டாடப்பட்டது.
  • தென்னை மரம் பனை மரக் குடும்பத்தைச் சேர்ந்ததோடு அது கோகோஸ் இனத்தைச் சேர்ந்த ஒரே இனமாகும்.
  • தேங்காய் என்பது உள்ளோட்டு குடும்பத்தைச் சேர்ந்ததோடு பெரும்பாலும் வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே அது காணப்படுகிறது
  • இந்தியாவில், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் ஆதரவுடன் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது.
  • தென்னை வளர்ச்சி வாரியம் (CDB) என்பது விவசாய அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • இதன் தலைமையகம் கேரளாவின் கொச்சியில் அமைந்துள்ளது.
  • உலகளவில் அதிக அளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் மூன்று நாடுகள் இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியனவாகும்.
  • தேங்காய் ஏற்றுமதியில் இந்தோனேசியா (1வது), இந்தியா (2வது), பிலிப்பைன்ஸ் (3வது), பிரேசில் (4வது) மற்றும் இலங்கை (5வது) ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்