மகரந்தச் சேர்க்கையின் முக்கியத்துவம், அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் நிலையான மேம்பாட்டிற்கு அவற்றின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தினை நிர்ணயித்தது.
இந்த தேதியானது அன்டன் ஜான்சாவின் (1734-1773) பிறந்த நாளுடன் ஒத்துப் போகிறது.
அவர் 18 ஆம் நூற்றாண்டில் தனது சொந்த நாடான ஸ்லோவேனியாவில் நவீன தேனீ வளர்ப்பு நுட்பங்களை அறிமுகம் செய்து முன்னோடியாக விளங்கினார் என்பதோடு இவர் வியன்னாவின் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தேனீ வளர்ப்பு ஆசிரியராகவும் இருந்தவர் ஆவார்.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Bee Engaged with Youth" என்பதாகும்.