TNPSC Thervupettagam

உலக தேன் உண்ணும் கரடி தினம் - அக்டோபர் 13

October 17 , 2022 678 days 255 0
  • முதல் உலக தேன் உண்ணும் கரடி தினமானது 2022 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.
  • இருபதாண்டுகளுக்கும் மேலாக தேனுண்ணும் கரடியின் வளங்காப்பு மற்றும் அதன் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வனவிலங்கு SOS இந்தியா நிறுவனத்தால் இது முன் மொழியப் பட்டது.
  • IUCN (சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம்) – உயிர் இனங்கள் உய்த்தல் என்ற ஆணையத்தின் (SSC) தேனுண்ணும் கரடி நிபுணர் குழுவானது இத்தினத்தினை ஏற்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற நாளாக இதனை அறிவித்தது.
  • தேனுண்ணும் கரடி என்பது உலகம் முழுவதும் காணப்படும் 8 கரடி இனங்களில் ஒன்று ஆகும்.
  • தேன்னுண்ணும் கரடிகள் குளிர்காலத்தில் நீண்ட நாட்கள் வரை உறங்குவதில்லை.
  • அதன் மற்றொரு பெயர் "தேன் கரடி" என்பதாகும்.
  • தற்போது தேனுண்ணும் கரடிகள் இந்திய துணைக் கண்டம், நேபாளம் ஆகிய நாடுகளிலும், இலங்கையில் அதன் ஒரு துணை இனமும் மட்டுமே காணப்படுகின்றன.
  • உலக தேனுண்ணும் கரடிகளின் எண்ணிக்கையில் சுமார் 90% இந்தியாவில் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்