தைராய்டு சுரப்பியின் முக்கியத்துவத்தைப் பற்றியும், தைராய்டு நோய் உள்ளவர்கள் முறையாகக் கண்டறியப்பட்டு, சிகிச்சை வசதிகளைப் பெறுவதையும் நாம் எவ்வாறு உறுதி செய்வது என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
1965 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதியன்று, ஐரோப்பிய தைராய்டு சங்கம் நிறுவப்பட்டது.
இந்த அமைப்பு தான் உலக தைராய்டு தினத்தை முதலில் அங்கீகரித்தது.
கழுத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பியான தைராய்டு சுரப்பி என்பது தைராக்ஸின் மற்றும் ட்ரையோடோதைரோனைன் ஆகிய இரண்டு முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
குறைவான மற்றும் அதிகப்படியான அயோடின் காணப்படும் இரண்டு நிலைகளிலும் முறையே ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிம் என்ற பாதிப்புகள் ற்படும்.
சுமார் 4.2 கோடி இந்தியர்கள் தைராய்டு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, தொற்றா நோய்கள் (NCDs) என்பதாகும்.