உலக தைராய்டு விழிப்புணர்வு தினம் - மே 25 அன்று, தைராய்டைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தைராய்டு நோயினைத் தடுத்தல் மற்றும் அதற்கான மருத்துவ சிகிச்சைப் பற்றிய கல்வியளித்தல் ஆகியவற்றிற்காகவும் கொண்டாடப்படுகிறது.
2008 ஆம் ஆண்டில், ஐரோப்பிய தைராய்டு சங்கம் (ETA), அமெரிக்க தைராய்டு சங்கம் (ATA) ஆகியவை இணைந்து, முதன் முறையாக, தைராய்டு நாளங்கள், அதன் எண்ணற்ற மற்றும் கண்ணில் புலப்படாத அறிகுறிகளுக்காக ஒரு தினத்தை (மே 25) முதல் முறையாக உலக அளவில் அர்ப்பணித்தன.
இத்தினம் முதல் முறையாக 2009 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அது முதல், ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதோடு, சர்வதேச தைராய்டு விழிப்புணர்வு வாரம் இந்த முக்கியமான தினத்தை ஒட்டி வருகிறது.