இந்தத் தினமானது சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் நிறுவப்பட்டதை நினைவு கூருவதற்காகவும், 1865 ஆம் ஆண்டில் முதல் சர்வதேச தந்தி உடன்படிக்கையானது கையெழுத்திடப்பட்டதையும் நினைவு கூரும் விதமாகவும் அனுசரிக்கப் படுகிறது.
இணையம் மற்றும் பிற தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் (ICTகள்) சமூகம் மற்றும் பொருளாதாரங்களுக்கு வழங்கக்கூடிய நன்மைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் உலகத் தகவல் சமூக தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான கருத்துருவானது “நிலையான மேம்பாட்டிற்கான எண்ணிமப் புத்தாக்கம்” என்பதாகும்.