TNPSC Thervupettagam

உலக தொழில்முனைவோர் மாநாடு

December 3 , 2017 2577 days 782 0
  • தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உலக தொழிற்முனைவோர் மாநாடு (Global Entrepreneurship Summit) அண்மையில் நடைபெற்றது.
  • இது தெற்கு ஆசியாவில் நடைபெறும் முதல் உலக தொழிற்முனைவோர் மாநாடாகும்.
  • ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் உயிரி அறிவியல், நிதியியல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற 4 முக்கிய தொழிற்துறைகளின் மீது விவாதிப்பதற்காக இம்மாநாடு நடத்தப்படுகிறது.
  • உலகம் முழுவதும் பல்வேறு வளரும் தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள், ஆதரவாளர்கள் என பல்லாயிரம் பேர் கூடும் ஓர் வருடாந்திர தொழிற்முனைவோர்கள் பங்கேற்பு மாநாடே உலகத் தொழில்முனைவோர் மாநாடாகும்.
  • 2010-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இம்மாநாடு நடத்தப்படுகின்றது.
  • 2017- ஆம் ஆண்டிற்கான இம்மாநாட்டின் கருத்துரு ”பெண்கள் முதலில்;அனைவருக்கும் வளம்” (Women first ; prosperity for all).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்