தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உலக தொழிற்முனைவோர் மாநாடு (Global Entrepreneurship Summit) அண்மையில் நடைபெற்றது.
இது தெற்கு ஆசியாவில் நடைபெறும் முதல் உலக தொழிற்முனைவோர் மாநாடாகும்.
ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் உயிரி அறிவியல், நிதியியல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற 4 முக்கிய தொழிற்துறைகளின் மீது விவாதிப்பதற்காக இம்மாநாடு நடத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு வளரும் தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள், ஆதரவாளர்கள் என பல்லாயிரம் பேர் கூடும் ஓர் வருடாந்திர தொழிற்முனைவோர்கள் பங்கேற்பு மாநாடே உலகத் தொழில்முனைவோர் மாநாடாகும்.
2010-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இம்மாநாடு நடத்தப்படுகின்றது.
2017- ஆம் ஆண்டிற்கான இம்மாநாட்டின் கருத்துரு ”பெண்கள் முதலில்;அனைவருக்கும் வளம்” (Women first ; prosperity for all).