உலக தொழுநோய் தினம் ஆனது ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில், இந்தத் தினமானது ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 30 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
தொழுநோய் குறித்த ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதையும் அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொழுநோய் என்பது புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாகும் (NTD) என்ற ஒரு நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,00,000க்கும் மேற்பட்ட புதியப் பாதிப்புகள் இதில் பதிவாகி வருவதுடன், இன்றும் சுமார் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் பாதிப்பு காணப்படுகிறது.
உலகளாவிய தொழுநோய்ப் பாதிப்புகளில் 53 சதவீதம் இந்தியாவிலேயே பதிவாகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Unite. Act. Eliminate" என்பதாகும்.
ஹான்சன் நோய் என்றும் அழைக்கப்படும் தொழுநோய் ஆனது, மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியாவினால் ஏற்படும் ஒரு நாள்பட்ட தொற்று நோயாகும்.
இது முதன்மையாக தோல், நரம்புகள் மற்றும் சீதமென் சவ்வுகளைப் பாதிக்கிறது.