TNPSC Thervupettagam

உலக தொழுநோய் தினம் – ஜனவரி 30

January 31 , 2022 939 days 387 0
  • இத்தினமானது ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
  • உலகம் முழுவதிலும் தொழுநோய் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டில் இத்தினமானது ஜனவரி 30 அன்று வருகிறது.
  • இந்த நோய் ஹான்சன்ஸ் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இந்தப் பண்டைய கால நோயைப் பற்றி மக்களுக்குத் தெரியப் படுத்திய பிரான்சு நாட்டு மக்கள் நல ஆர்வலர் ரவுல் ஃபோல்லெரு என்பவரால் 1954 ஆம் ஆண்டில் இந்தத் தினமானது முதன்முதலாக தொடங்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, தொழுநோயாளிகள் கண்ணியமான வாழ்வை வாழ்வதற்கும் அவர்களுக்கான கண்ணியத்தை உருவாக்குவதற்கும் ஒன்றிணையுங்கள் (United for Dignity) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்