சர்வதேச அளவில் தொழுநோயைப் பற்றி உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக தொழுநோய் தினம் (World Leprosy Day) கொண்டாடப்படுகின்றது.
மைக்கோ பாக்டீரியம் லெப்ரே எனும் பாக்டீரியாவினால் தொழுநோய் உண்டாகின்றது. இவை மனித உடலில் மிகவும் மெதுவாக பெருகவல்ல தொற்றுநோயாகும்.
குழந்தைகளில் தொழுநோயோடு தொடர்புடைய குறைபாடுகள் ஏற்படுவதை முற்றிலும் தடுப்பதே இந்த நாளினுடைய அனுசரிப்பின் முக்கிய நோக்கமாகும்.
தொழுநோயானது ஹான்சென் நோய் (HANSEN Disease) எனவும் அழைக்கப்படுகின்றது.
இது மனித இனத்திற்கு தெரிந்த பழமையான நோய்களில் ஒன்றாகும்.
தொழுநோயைப் பற்றி உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1954ஆம் ஆண்டு பிரெஞ்ச் நாட்டின் கொடையாளரான (Philanthropist) ரவூல் பொல்லேரூ என்பவரால் இத்தினம் நிறுவப்பட்டது.