உலகெங்கிலும் உள்ள, இந்தப் பலவீனப்படுத்தும் நோயால் பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் பல்வேறு அறிகுறிகளுடன் போராடுபவர்களுக்காக இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
லூபஸ் (தோல் அழிவு நோய்) என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும் என்பதோடு இந்த பாதிப்பில் நமது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பானது நமது உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புகளைத் தாக்குகிறது.
இந்த வீக்கம் மூட்டுகள், தோல், சிறுநீரகங்கள், இரத்த அணுக்கள், மூளை, இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றினைப் பாதிக்கும்.
உலகளவில் சுமார் 5 மில்லியன் மக்கள் தோல் அழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 1.5 மில்லியன் பேர் அமெரிக்காவில் மட்டும் வாழ்கின்றனர்.