உலக நகரங்கள் கலாச்சார மன்றத்தில் (WCCF) அங்கம் வகிக்கும் முதல் இந்திய நகரமாக பெங்களூரு மாறியுள்ளது.
உலக நகரங்கள் கலாச்சார மன்றமானது 2012 ஆம் ஆண்டில் லண்டனின் கலாச்சாரம் மற்றும் படைப்பாக்கம் மிக்க தொழில்துறைகளுக்கான துணை மேயரான ஜஸ்டின் சைமன்ஸ் OBE என்பவரால் நிறுவப்பட்டது.
இந்த நகரங்களில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் ஆராய்ச்சி மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், நகரங்களின் எதிர்காலச் செழுமையில் கலாச்சாரத்தின் முக்கியப் பங்கு குறித்து ஆராயவும் இது வழிவகை செய்கிறது.