TNPSC Thervupettagam

உலக நடுக்குவாதம் (பார்க்கின்சன்) தினம் – ஏப்ரல் 11

April 14 , 2019 1994 days 968 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி உலக பார்க்கின்சன் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தத் தினமானது பார்க்கின்சன் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த நோய் நிலைமையின் அதிகமான புரிதலை ஊக்குவிப்பதையும் இது எவ்வாறு ஒரு மனிதனைத் தாக்குகிறது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

  • 2019 ஆம் ஆண்டின் கருத்துருவானது “விழிப்புணர்வு என்பது #KeyToPD” ஆகும்.
  • இந்த நாளானது 1817 ஆம் ஆண்டில் “நடுங்கும் முடக்குவாதம் மீதான ஒரு கட்டுரை” என்பதில் பார்க்கின்சன் நோய் குறித்து விளக்கிய இலண்டனைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் பார்க்கின்சன் என்பவரின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • இவர் பார்க்கின்சன் நோய் குறித்த அறிகுறிகளுடன் உள்ள 6 நபர்களைப் பரிசோதித்து விளக்கம் அளித்தார்.
  • ஒரு பிரெஞ்சு நரம்பியல் வல்லுநரான ஜீன்-மார்ட்டின் சர்க்கேட் என்பவர் “பார்க்கின்சன் நோய்” என்ற சொற்றொடரை உருவாக்கினார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்