TNPSC Thervupettagam

உலக நன்னீர் விலங்குகளின் எண்ணிக்கை – குறைவு

August 17 , 2019 1929 days 797 0
  • சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவானது தற்பொழுது சர்வதேச அளவில் பெரிய நன்னீர் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறித்து ஆய்வு செய்துள்ளது.

 

  • 1970 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை சர்வதேச அளவில் பெரிய நன்னீர் விலங்குகளின் எண்ணிக்கையானது 88 சதவிகித அளவிற்குக் குறைந்துள்ளது. கடல் அல்லது நிலத்தில் வாழும் முதுகெலும்புள்ள விலங்குகளின் இழப்பு இருமடங்காகும்.
  • பெரிய மீன் இளங்கள் அச்சுறுத்தல் நிலையில் இருக்கின்றன. உதாரணம் ஸ்டர்ஜியான்ஸ், சாலமோன் மீன்கள், பெரிய கெளுத்தி மீன்கள்
  • பாய்ஜி என்ற சீன நதி டால்பினானது (ஓங்கில்) மனிதர்களின் நடவடிக்கையால் அழிந்து போகும் முதலாவது டால்பின் இனமாக இருக்கின்றது.
  • அவற்றிற்கான இரண்டு முக்கியமான அச்சுறுத்தல்கள் பின்வருமாறு
    • மிக அதிக அளவில் சுரண்டுதல் (வேட்டையாடுதல்)
    • பரந்து விரிந்து ஓடும் நதிகளின் இழப்பு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்