கல்வி சார் நன்மதிப்பு மற்றும் சிறப்பிற்காகப் புகழ்பெற்ற உலகெங்கிலும் உள்ள சிறந்தப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆனது முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான உலக நன்மதிப்பு தரவரிசையில் ஹார்வர்டு பல்கலைக் கழகம் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்திருப்பது இது தொடர்ந்து 14வது ஆண்டாகும்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக நிறுவனம் மற்றும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (MIT) ஆகியவை கூட்டாக இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.
முதல் 7 இடங்களில் மிக அதிகம் என்ற தரவரிசைப் பெற்ற ஐக்கியப் பேரரசு நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மட்டுமே ஆகும் என்ற நிலையில் இதர நிறுவனங்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆகும்.
இந்த ஆண்டு, 38 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 300 நிறுவனங்கள் டைம்ஸ் உயர் கல்வி இதழால் (THE) தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (IISc) ஆனது, 2023 ஆம் ஆண்டில் 101 முதல் 125 வரையிலான இடங்களில் இருந்து சுமார் 201 முதல் 300 வரையிலான இடங்களுக்குச் சரிந்துள்ளது.
டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகிய நிறுவனங்கள் இந்தத் தரவரிசையில் தனது இடத்தில் இருந்து சரிந்து, இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் இடம் பெற்றுள்ள 201 முதல் 300 வரையிலான இடங்களில் சேர்ந்துள்ளன.
டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது 151-175 என்ற குழுவில் இருந்து 201-300 என்ற குழுவிற்குச் சரிந்துள்ள அதே நேரத்தில் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது 176-200 என்ற குழுவிலிருந்து 201-300 குழுவிற்குச் சரிந்துள்ளது.
முந்தைய ஆண்டில் 151-175வது தரவரிசையில் இருந்த மும்பையின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகம் ஆனது இப்பட்டியலில் இடம் பெறவில்லை.
201-300 என்ற குழுவில் இடம் பெற்றுள்ள ஒடிசாவின் புவனேஸ்வரில் அமைந்துள்ள ஒரு தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான ஷிக்சா ‘ஓ’ அனுசந்தன் ஆனது இந்தப் பட்டியலில் புதிதாக நுழைந்துள்ளது.