ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் ஆனது மிகச் சமீபத்தில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 83.6 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவச் செலவினத்துடன், உலகளவில் நான்காவது அதிக இராணுவச் செலவினம் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்தது.
இந்தியாவின் செலவினம் ஆனது 2022 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 4.2 சதவீதமும், 2014 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 44 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உலக அளவில் இராணுவச் செலவினத்தில் முதல் மூன்று இடங்களில் உள்ளன என்ற நிலையில் அவற்றைத் தொடர்ந்து இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் உள்ளன.
உக்ரைன் 2023 ஆம் ஆண்டில் எட்டாவது பெரிய இராணுவச் செலவின நாடாக ஆனது, மேலும் அதன் செலவினத்தை 51% அதிகரித்துள்ளது.