பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள உலக அரசாங்கங்கள் கடன் வாங்கியதால், உலக நாடுகளின் பொதுக் கடன் மதிப்பானது 2022 ஆம் ஆண்டில் 92 டிரில்லியன் டாலராக உயர்ந்தது.
கடந்த இருபது ஆண்டுகளில் உலக நாடுகளின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன் மதிப்பானது ஐந்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
உலக நாடுகளின் அரசாங்கக் கடனில் வளர்ந்து வரும் நாடுகளின் பங்கு கிட்டத்தட்ட 30% ஆக உள்ள நிலையில், இதில் 70 சதவீதப் பங்கானது சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் கடன் மதிப்பாகும்.
51 வளர்ந்து வரும் நாடுகளானது, அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விகிதமானது அதிக அளவிலான கடனைக் குறிக்கின்ற 60% வரம்பிற்கு மேல் கொண்டு உள்ளன.
ஆப்பிரிக்காவில், கல்வி அல்லது சுகாதாரத்திற்காகச் செலவிடும் ஒரு தொகையைக் காட்டிலும் வட்டிக் கொடுப்பனவுகளுக்குச் செலவிடப்படும் தொகை மிக அதிகமாக உள்ளது.
பத்திரதாரர்கள் மற்றும் வங்கிகள் போன்ற தனியார் கடன் வழங்கு நிறுவனங்கள், வளர்ந்து வரும் நாடுகளின் மொத்த வெளிநாட்டுப் பொதுக் கடனில் 62% பங்கினைக் கொண்டுள்ளன.
ஆப்பிரிக்காவில், 2010 ஆம் ஆண்டில் 30% ஆக இருந்த இந்தக் கடன் வழங்கு நிறுவனங்களின் பங்கானது 2021 ஆம் ஆண்டில் 44% ஆக உயர்ந்துள்ளது.
லத்தீன் அமெரிக்கா 74% என்ற அளவில், வெளிநாட்டு அரசாங்கக் கடனை வைத்து இருக்கும் தனியார் கடன் வழங்கு நிறுவனங்களின் அதிகபட்ச விகிதத்தைக் கொண்டு உள்ளது.