TNPSC Thervupettagam

உலக நாடுகளின் போக்குகள்: 2022 ஆம் ஆண்டில் ஒரு வலுக்கட்டாயமான வகையிலான புலம்பெயர்வு

June 17 , 2023 398 days 229 0
  • உலக நாடுகளின் போக்குகள்: 2022 ஆம் ஆண்டில் வலுக்கட்டாயமான வகையிலான புலம்பெயர்வு அறிக்கை எனப்படும் ஒரு வருடாந்திர அறிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 108.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வலுக் கட்டாயமாக புலம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களில் 30 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவர்.
  • 2023 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 110 மில்லியனாக அதிகரித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு முழுவதிலும் ஏற்பட்ட பருவநிலை சார்ந்த பேரழிவுகள் 32.6 மில்லியன் மக்களின் உள்நாட்டு  புலம்பெயர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
  • இதில் 8.7 மில்லியன் பேர் அந்த ஆண்டின் இறுதிக்குள் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்ப இயலவில்லை.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான அனைத்து வகை புதியப் புலம்பெயர்வுகளில் பாதிக்கும் மேற்பட்டவை (54 சதவீதம்) பேரழிவு தொடர்பான உள்நாட்டுப் புலம்பெயர்வுகள் ஆகும்.
  • மோசமான மேம்பாட்டுக் குறிகாட்டிகளைக் கொண்ட 46 நாடுகள் அல்லது குறைவான வளர்ச்சியடைந்த நாடுகள் உலக அகதிகளின் எண்ணிக்கையில் 20 சதவீத்தினைக் கொண்டுள்ளன.
  • 2021 ஆம் ஆண்டினை விட கடந்த ஆண்டில் 19.1 மில்லியன் மக்கள் தங்கள் சொந்தப் பகுதிகளை விட்டு வெளியேற்றப் பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்