உலக நாடுகளில் உள்ள ஏரிகளின் நீர் சேமிப்பு கொள்ளளவுகளில் குறைவு
May 24 , 2023 555 days 320 0
இந்த ஆய்வானது, 1992 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான ஒரு காலக் கட்டத்தில் இந்த நீர்நிலைகளில் 53 சதவீத நீர்நிலைகளின் சேமிப்பு கொள்ளளவில் ஏற்பட்ட குறைவு குறித்த புள்ளியியல் ரீதியான தகவல்களைக் கண்டறிவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஏரிகள் மற்றும் பல நீர்த்தேக்கங்களில் பாதிக்கும் மேற்பட்டவை வறண்டு வருகின்றன.
உலகின் நீரியல் பரப்பு சார்ந்த நன்னீர் நீரில் 87 சதவீதத்தினைக் கொண்டுள்ள இந்த ஏரிகளை பருவநிலை மாற்றம் மற்றும் மனிதச் செயல்பாடுகள் மிகப்பெரிய ஆபத்தில் ஆழ்த்துகின்றன.
53 சதவீத ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில், ஆண்டிற்கு சுமார் 22 ஜிகா டன்கள் என்ற வீதத்தில் நீர்ச் சேமிப்பு கொள்ளளவு குறைந்துள்ளதாக இந்த ஆய்வின் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழு ஆய்வுக் காலத்திலும், 603 கன கிலோமீட்டர் நீர் இழக்கப் பட்டுள்ளது.
இது மீட் ஏரியில் உள்ள நீரின் அளவை விட 17 மடங்கு அதிகமாகும்.
மீட் ஏரியானது, அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும்.