TNPSC Thervupettagam

உலக நிதிசார் தொழில்நுட்ப திருவிழா 2023

September 11 , 2023 440 days 306 0
  • மூன்று நாட்கள் அளவிலான 2023 ஆம் ஆண்டு உலக நிதிசார் தொழில்நுட்ப திருவிழாவானது (GFF 2023) சமீபத்தில் நிறைவடைந்தது.
  • பாரத் ஸ்டேட் வங்கியானது, RuPay நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவு பெற்ற தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையினை இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியது.
  • நாடு முழுவதும் சாலைப் போக்குவரத்து முதல் இரயில், நீர்வழிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் வரை அனைத்து வகையான போக்குவரத்திற்கும் பணம் செலுத்துவதற்கு இந்த அட்டை உதவும்.
  • சில்லறை விற்பனை நிலையங்களில் பொருள் வாங்குவதற்கும் இந்த அட்டையைப் பயன்படுத்தலாம்.
    • இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் பின்வரும் 5 புதியக் கட்டண அமைப்புகள் குறித்து அறிவித்தார்.
    • ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் சார்ந்த கடன் வசதி
    • ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் சார்ந்த லைட் எக்ஸ்
    • ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் சார்ந்த வருடல் & பணம் செலுத்தும் நுட்பம்
    • Hello! UPI — ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் சார்ந்த உரையாடல் அடிப்படையிலான கொடுப்பனவுகள்
    • பில்பே கனெக்ட் – உரையாடல் அடிப்படையிலான கொடுப்பனவுகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்