மூன்று நாட்கள் அளவிலான 2023 ஆம் ஆண்டு உலக நிதிசார் தொழில்நுட்ப திருவிழாவானது (GFF 2023) சமீபத்தில் நிறைவடைந்தது.
பாரத் ஸ்டேட் வங்கியானது, RuPay நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவு பெற்ற தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையினை இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியது.
நாடு முழுவதும் சாலைப் போக்குவரத்து முதல் இரயில், நீர்வழிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் வரை அனைத்து வகையான போக்குவரத்திற்கும் பணம் செலுத்துவதற்கு இந்த அட்டை உதவும்.
சில்லறை விற்பனை நிலையங்களில் பொருள் வாங்குவதற்கும் இந்த அட்டையைப் பயன்படுத்தலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் பின்வரும் 5 புதியக் கட்டண அமைப்புகள் குறித்து அறிவித்தார்.
ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் சார்ந்த கடன் வசதி
ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் சார்ந்த லைட் எக்ஸ்
ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் சார்ந்த வருடல் & பணம் செலுத்தும் நுட்பம்
Hello! UPI — ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் சார்ந்த உரையாடல் அடிப்படையிலான கொடுப்பனவுகள்
பில்பே கனெக்ட் – உரையாடல் அடிப்படையிலான கொடுப்பனவுகள்.