ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 ஆம் தேதியன்று உலக நிமோனியா (நுரையீரல்நோய்) தினம் அனுசரிக்கப் படுகின்றது.
2009 ஆம் ஆண்டு நவம்பர் 02 அன்று குழந்தைகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் முதலாவது உலக நிமோனியா தினத்தை அனுசரிப்பதற்காக ‘குழந்தைகள் மீதான நிமோனியாவுக்கு எதிரான உலகளாவிய கூட்டணி’ என்ற ஒரு அமைப்பாக அவை ஒன்றிணைந்தன.
இந்த ஆண்டின் உலக நிமோனியா தினத்தின் கருத்துரு, "அனைவருக்கும் ஆரோக்கியமான நுரையீரல்" என்பதாகும்.
நிமோனியா என்பது உலகெங்கிலும் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மரணத்தை ஏற்படுத்தும் ஒரு கொடிய சுவாச நோயாகும்.
2016 ஆம் ஆண்டில் உலகளாவிய நிமோனியா பாதிப்பில் 70% பாதிப்பை இந்தியா மட்டுமே கொண்டுள்ளது.